சனி, 20 செப்டம்பர், 2014

உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!!

                        




aha!!


       காலை நேர பரபரப்புகளுக்கு இடையே கவனம் கோரவே செய்கின்றன சில நம்பர் ப்ளேட்கள். பொதுவாக போலீசும், பிரஸ் பெருமக்களும் தங்கள் துறையை நம்பர் ப்ளேட்டில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம் இல்லையா? என் தோழி ஒருவரது மகன் இப்போ மெடிசின் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அந்த தோழியின் வண்டியில் டாக்டர்களின் அடையாளமான சிலுவை மீது சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு போல ஒரு லோகோ இருக்கிறது. வருங்கால டாக்டரின் அம்மாவாம்!! என் தம்பியின் பல்சருக்கு 5014 எனும் எண்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. பின்ன SOLA என அதை எழுதமுடியும் சாத்தியத்தில் என் அப்பாவின் பேரான சோலைராஜ் என்பதில் பாதி வந்து விடுகிறதே. 6055என்பதை  bossஎன்றும், 8055என்பதை  BOSS என்றும், 8045 என்பதை BOYS எழுதியிருக்கும் நம்பர் ப்லேட்களை பார்த்திருக்கிறேன். PRAISE THE LORD களும் அதிகம். 

தமிழ்ப்பற்று!!

                     பத்துவருடத்தில் மிக பெரிய சமூக மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இந்த வண்டி ஓவியங்களில் கண்கூட காணமுடிகிறது. முன்பெல்லாம் வண்டிகளில் தங்கள் ஆண் வாரிசுகள் பெயரை மட்டுமே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் இப்போ ரெண்டு பெண்ணாய் இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணுமாய் இருந்தாலும் சரி அந்த பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். குழலி, யாழி என எழுதி இரண்டு பெயருக்கும் பொதுவாய் னி போட்டு எழுதியிருக்கும் மருது சங்கர் அண்ணாவின் வண்டி இன்னும் மனக்கண்ணில் ஸ்டாண்ட் போட்டு நிற்கிறது.





                  நாங்க bad பாய்ஸ், அடங்க மாட்டோம்டா மாதிரியான அட்ராசிட்டி பசங்க எல்லாம் அதிக பட்சம் இருபத்திநான்கு வயதுக்குள் தான் இருக்கிறார்கள். (அப்பறம் என்ன? வீட்ல இருக்கிறவங்க ஒரு  கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா அந்த இடத்தில் லவ் birds படம் தான்). இந்த நம்பர் ப்ளேட் கலாட்டாவில் தமிழக அளவில் திருவள்ளுவர், ஜீசுஸ், பிள்ளையார், மெக்கா, பெரியாரை விட பாதிக்கப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார்.  அவர் தன் சொத்தையெல்லாம் தேச  விடுதலைக்காக செலவு செய்தவர், மக்கள் பணிக்காக போற்றுதலுக்கு உரிய பல தியாகத்தை செய்திருக்கிறார் என்றும் படித்திருக்கிறேன்.  அவர் எதற்காக போராடினார் என நன்கு உணர்ந்த, புரிந்துகொண்ட இளைஞர்கள் அவரை நெஞ்சில் நிறுத்தி பணி செய்வதை பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை. f.b, டீ-ஷர்ட் என அவர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். "பலபேர் கமெண்ட் போட்டாலும் அதில் உள்ள ஒரு பொண்ணு கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி லைக் தட்டினால் நீயும் என் தோழனே" என்பது மாதிரியான பல படுகொலைகளை சந்தித்திருக்கும் இவர் மேற்கோள்கள் திருக்குறளுக்கு ஈடாக ரீமேக் ஆகி தவிக்கின்றன. சே என்றால் நண்பன்(தோழர்) என்று பொருளாம். இந்த பாழாய்ப்போன முகபுத்தகத்தால் வீணாய் போன மற்றொரு சொல் "தோழர் " எனும் தோழர் வெங்கியின் ட்விட் / ஸ்டேட்டஸ் சரிதானே:))

22 கருத்துகள்:

  1. சரியாகச் சொன்னீர்கள் சகோ, உண்மைதான் இன்று பல அப்பாக்கள் பையன் பெயரைவிட பெண்பிள்ளைகள் பெயரைத்தான் போடுகிறார்கள்.... அப்படீன்னா சே க்கு அர்த்தம் என்னதான் சகோ? நானும் தோழர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. பலரும் அப்பா தந்த பரிசுன்னு போட்டுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன் ,ஆனால் ஒருவர்கூட வாங்கித் தந்த மாமனாருக்கு விசுவாசமாய் 'மாமனார் தந்த பரிசு 'போட்டுக் கொள்ள வில்லையே ?வாங்கிக் கொள்ளும் போது வராத அவமானம் ,இப்போது எப்படி தடுக்கிறது என்று புரியவில்லை !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு மாமனார் வீட்டில் நிறைய கிடைத்திருக்கிறது போல...
      எனக்கெல்லாம் ஒன்றும் கிடைக்கவில்லையே பகவான்ஜீ

      நீக்கு
  3. என்னோட நம்பர் AD 22463 / 5 க்கு பக்கத்துல ஞானி ஸ்ரீபூவு போட்டோவை சிறிதாக வைத்தேன் POLICE பிடித்து 200/ Dirhams அபராதம் போட்டு விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  4. பதிவைப் படித்தவுடன் பஸ்சுக்காக பஸ் ஸ்டாப்பில் அதிக நேரம் நின்று இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்த காலத்து இளைய தலைமுறை பற்றிய தத்து பித்துவங்களை படிக்க நன்றாக இருந்தது
    த.ம.2

    பதிலளிநீக்கு
  5. இனிய வணக்கம் சகோதரி....
    இருவேறு செய்திகளை அழகாக சொல்லியிருகீங்க...
    மனசுக்கு எது சரின்னு படுதோ அதை அப்படியே
    செய்வதற்கும் ஒரு துணிவு வேண்டுமே...
    அந்த வகையில் இன்றைய தலைமுறையினர்
    செய்வதெல்லாம் வேடிக்கையாகவும் சில சமயம்
    கூர்ந்து கவனிக்கப் படவேண்டியதாகவும் உள்ளது..
    அருமையான தகவல்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  6. சேகுவேரா (படம்) படும் பாட்டை சரியாக சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!! அது என்னோட கார் என்று சொல்லுது

    பதிலளிநீக்கு
  8. சில Fancy எண்கள் ஏலம் கூட விடுவதுண்டு! பல லட்சங்கள் கொடுத்து இந்த எண்களை வாங்குவோர்கள் இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பல்லாம் ஃபோன் காரங்க கூட Fancy நம்பர் வேணுமானு கேக்க ஆரம்பித்து விட்டார்கள் அதுவும் கூப்பிட்டு கூப்பிட்டு!

      நீக்கு
  9. சிறப்பான பகிர்வு !வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  10. பதிவு நன்றாக இருந்தது. அனைவர் மனதிலும் எழும் சிந்தனை. இருப்பினும் தாங்கள் தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அது சரி, உங்க வாகனத்தில், நீங்க, "நான் ஒரு மதுப் பிரியை"னு ஒரு "நேம் ப்ளேட்" வைத்து எல்லாரையும் குழப்பிவிடுங்க!!! :)

    பதிலளிநீக்கு
  12. அந்த ட்வீட் இந்த வார வலைபாயுதேவில் படித்தேன்.. அதுதான் உண்மை...

    உங்கள் பதிவில் வட்டியும் முதலும் ராசு முருகனின் லேசான சாயல் இருக்கிறது.. இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தீர்கள் எனில் அட்டகாசமாய் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  13. போங்க சகோதரி! மைதிலி! பல அர்த்தங்கள் புரிய மாட்டேங்குதுபா....பசங்க (ஹேய் உடனே எங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சுனு நினைச்சுடாதீங்கப்பா...நாங்க ரொம்ப சின்ன புள்ளைங்கனு சொல்ல வந்தோம்....ஹஹஹ) என்னவெல்லாமோ நம்பர் ப்ளேட்ல எழுதி வைக்கிறாங்கப்பா...ஹார்ட் போட்டு ஆரோ கூட போடுறாங்கப்பா.....ரோட்டுல போற எல்லா பொண்ணுங்களுக்கும் ஹார்ட்டும் அந்த ஆரோவா?!!! இப்படி நிறைய...பசங்க என்னதான் சொல்ல வர்ராங்க கடைசில!!!???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "//இப்படி நிறைய...பசங்க என்னதான் சொல்ல வர்ராங்க கடைசில!!!???//' - இதிலிருந்தே தெரியலையா துளசி சார் , உங்களுக்கு எவ்வளவு வயசாயிடுச்சுன்னு.

      நீக்கு
  14. “ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை“ - எப்படிப்பா இப்படியெல்லாம் - நான் நினைத்தது போல - எழுதுற? நண்பர் முரளி சொல்லியிருப்பது போல, சே வை இப்படி சே என்று ஆக்குகிறார்களே? (தமிழ்நாட்டில் புரட்சி படும் பாடுபோல) என்று நானும் பலமுறை நினைத்துக் குமைந்ததுண்டு. நல்ல வேளை நீ என் வாகனத்தை இன்னும் பாக்கல போல (என் மகள் தன் பெயரை எழுதக்கூடாது என்றும் கல்லூரியில் கலாட்டா பண்ணுவார்கள் என்றும் கேட்டதால் யார் பேரையும் எழுதாமல் முன்புறம் ஞாநி வரைந்தளித்த பாரதியின் மீசை மற்றும் விழிகளை மட்டும் போட்டு, அவர் எழுத்திலேயே “அன்பென்று கொட்டு முரசே“ என்று போட்டு, பின்பக்கக் கண்ணாடியில் ஒரு நிலவு படத்தை ஒட்டி விட்டேன். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்று மாவோ சும்மாவா சொன்னார்? வித்தியாசமான ஆய்வு வாழ்க!

    பதிலளிநீக்கு
  15. அப்படியே அடுத்த கடட ஆய்வாக பசங்களும் பிள்ளைகளும் அணியும் டீசர்ட் வாசகங்களை எடுத்து ஆய்வு செய்தால் இன்னும் பல செய்திகள் பிடிபடும்.

    பதிலளிநீக்கு
  16. உங்களோட வண்டில நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது சகோ!!!

    இங்கும் இந்த fancy நம்பர் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அதற்கு வருடந்தோறும் கப்பம் கட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. தோழர் என்று பொருள் படும் சே இன்று சேச்சே ஆகிவிட்டது. முகநூலில் டோலர் என்று வேறு மாறி இம்சிக்கிறது. அழகான அங்கதத்துடன் அருமையாகச் சொன்னாய் தங்கையே.... கைதட்டிப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு